Monday, September 3, 2018

15-08-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 119 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
15-08-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 119
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அப்பாவின் பழைய புகைப்படம்
தேடி அலையும் நேற்றைய மகன்
ஒருவனுடன்பேசிக் கொண்டிருந்தேன் ..
மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
உருகி வழிந்தது அவன் வார்த்தைகள் ..
ஒற்றைப்புகைப்படம் தேடும் அந்த நீள்பயணத்தில்
தொலைந்து கொண்டிருந்தது அவன் பாசம் ...
மனைவியாக வந்தவளுக்கு
அப்பாவை காட்டும் முனைப்பு
அவன் அப்பாவாகி போனதும் முடியாமல் போனதாம் ..
திருமணம் காதுகுத்தல் மஞ்சள் நீராட்டு
விசேஷங்களில் அப்பாவை தவிர எல்லோரும்
சிரித்தபடி குடும்ப புகைப்படங்களில்
எங்குதான் போய் தொலைந்தார் இந்த அப்பா
லேசான எரிச்சலில் அனாதைப்பிணமாய்
மறைந்துவிட்ட அப்பாவை மானசீகமாய்
திட்ட ஆரம்பித்துவிட்டான் ...
மூளையின் செல்களில் எத்தனை நாள்தான்
அப்பாவின் உருவத்தை சுமந்து திரிவது ..
ஒரு மகனுக்கும் தந்தைக்குமான உரையாடல்
முற்றுபெறாமலே தொடர்கிறது ...
எனக்குள் நானே பேசிக்கொண்டிருப்பதை
நீங்கள் கவனிக்காத நேரத்தில்
வெளியேறுகிறான் அவன் என்னிடமிருந்து...
- நாகா

No comments:

neelam enbathu song