Monday, September 3, 2018

13-08-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 118 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
13-08-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 118
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு தேவதையை
ஞாகபடுத்துவதைப்போல இருக்கும்
அவள் வருகை ...
வரம் தருவாளோ தெரியாது
நிச்சயம் சாபம் தரமாட்டாள்
என்பது மட்டும் சாத்தியம் ...
வெள்ளை உடையில் அவள் இல்லையென்பதும்
வானத்தில் இருந்து குதிக்கவில்லை என்பதும்
அவள் தேவதைத்தானோ என்பதில்
அடிக்கடி உண்டாகும் சந்தேகம்
எனக்குள் உறைந்து போனது இயல்பாய்...
அந்த தேவதையுடன்
தொடர்கிறது என் பயணங்கள் ...
தேவதைக்கு பெயர் இருந்தும்
தேவதையென்றே அழைக்கிறேன்
எல்லோருக்கும் புரியும் விதமாக ...
மழைதுளிக்குள் கடல் இருப்பதுபோல்
எனக்குள் அந்த தேவதை நிரம்பி வழிகிறாள்... ...
காகித கப்பலை மிதக்கவிட்ட
தருணத்தில் தான் கப்பலில்
ஒரு மாலுமியாக என்னை கரைசேர்க்க வந்தாள்...
வளையும் சுக்கானின் திருப்பத்தில்
என் திசையை தீர்மானிக்கிறாள் அந்த தேவதை...
மௌனத்தை எனக்குள் தீட்டும் அவளின்
மொழித்தூரிகையில் சிதறும் வண்ணமாகிறேன் ......
இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது
தேவதையால் ஆசீர்வதிக்கப்பட்டவனின் கவிதையை ....
- நாகா

No comments:

neelam enbathu song