RJ Naga
02-08-2017
புதன்
புதன்
ஒற்றையடிப்பாதை : 112
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
முதல் முறையா
பொய் சொல்லலாம்னு முடிவெடுத்திருக்கேன் ..
உண்மை போல ஒரு பொய்யை
உருவாக்கும் முயற்சியில் இப்ப நான்...
அது பொய்யில்லைனு சத்தியமா
துண்டுபோட்டு தாண்டினாலும்
மெய்யில்லைன்றதுல நம்பிக்கை எனக்கு ...
ஒரு பொய்ய பொய்யாவே சொல்ல
ரொம்ப தைரியம் வேணும் போல ...
கண்ணப்பார்த்து சொல்லமுடியாது
இருந்தாலும் நெலம் பார்த்தாவது
சொல்லிவிட வேண்டும்
இல்லைனா பொய்ய வெச்சுகிட்டு
காலம் தள்ளமுடியாது இல்ல .......
முதல் பொய்ய எப்படி ஆரம்பிக்கலாம்
ஏகப்பட்ட குழப்பத்தோடு தான் இப்போ...
இலக்கணசுத்தமா பொய் பேசமுடியாது
இருந்தாலும் ஒத்த பொய்யில
குப்புற கவுந்துடுவோமான்னு
நெசமாலுமே பயம் வந்து கொல்லுது ...
உண்மைய சொன்னப்ப யாரும்
நம்ப மறுத்தப்பத்தான்
இந்த விபரீத முடிவு எடுக்க வேண்டியதா போச்சு ...
அரிச்சந்திரன்னு பெயரை
மாத்தி வெச்சுக்கலாம்னு நெனச்சப்பத்தான்
உண்மைக்கும் எனக்குமான இடைவெளி
அதிகமானதை உணர ஆரம்பிக்கிறேன் ...
நேத்துவரைக்கும் நம்பாத ஊரு
இப்போ நம்ப ஆரம்பிச்சா நான்
பொய் சொல்றதுல பாஸாயிட்டேன்னு அர்த்தம்
அப்ப பேச ஆரம்பிக்கட்டுமா... ...
பொய் சொல்லலாம்னு முடிவெடுத்திருக்கேன் ..
உண்மை போல ஒரு பொய்யை
உருவாக்கும் முயற்சியில் இப்ப நான்...
அது பொய்யில்லைனு சத்தியமா
துண்டுபோட்டு தாண்டினாலும்
மெய்யில்லைன்றதுல நம்பிக்கை எனக்கு ...
ஒரு பொய்ய பொய்யாவே சொல்ல
ரொம்ப தைரியம் வேணும் போல ...
கண்ணப்பார்த்து சொல்லமுடியாது
இருந்தாலும் நெலம் பார்த்தாவது
சொல்லிவிட வேண்டும்
இல்லைனா பொய்ய வெச்சுகிட்டு
காலம் தள்ளமுடியாது இல்ல .......
முதல் பொய்ய எப்படி ஆரம்பிக்கலாம்
ஏகப்பட்ட குழப்பத்தோடு தான் இப்போ...
இலக்கணசுத்தமா பொய் பேசமுடியாது
இருந்தாலும் ஒத்த பொய்யில
குப்புற கவுந்துடுவோமான்னு
நெசமாலுமே பயம் வந்து கொல்லுது ...
உண்மைய சொன்னப்ப யாரும்
நம்ப மறுத்தப்பத்தான்
இந்த விபரீத முடிவு எடுக்க வேண்டியதா போச்சு ...
அரிச்சந்திரன்னு பெயரை
மாத்தி வெச்சுக்கலாம்னு நெனச்சப்பத்தான்
உண்மைக்கும் எனக்குமான இடைவெளி
அதிகமானதை உணர ஆரம்பிக்கிறேன் ...
நேத்துவரைக்கும் நம்பாத ஊரு
இப்போ நம்ப ஆரம்பிச்சா நான்
பொய் சொல்றதுல பாஸாயிட்டேன்னு அர்த்தம்
அப்ப பேச ஆரம்பிக்கட்டுமா... ...
- நாகா

No comments:
Post a Comment