RJ Naga
03-08-2017
வியாழன்
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 113
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
செறுவாட்டு பணம் சேர்த்து
சீல ஒண்ணு வாங்கியார
கண்டாங்கி தொட்ட இடம்
கண்ணுப்பட்டு புண்ணாச்சு...
சீல ஒண்ணு வாங்கியார
கண்டாங்கி தொட்ட இடம்
கண்ணுப்பட்டு புண்ணாச்சு...
தும்பப்பூ வேட்டிக்கட்டி
மந்தையில அவன் நடக்க
சாட்டைய மறந்துப்புட்டு
பம்பரமா சுத்துறனே...
மந்தையில அவன் நடக்க
சாட்டைய மறந்துப்புட்டு
பம்பரமா சுத்துறனே...
சிறுக்கி மவ மனசுக்குள்ள
ஒத்த ரயிலு போல வந்து
தண்டவாளம் கடக்க வச்சு
தரை தட்டி கவிழுறேனே ..
ஒத்த ரயிலு போல வந்து
தண்டவாளம் கடக்க வச்சு
தரை தட்டி கவிழுறேனே ..
கருப்பட்டி காப்பி தண்ணி
கருக்கலிலே கொண்டுபோனா
உப்புக்கண்டத்தோட
உச்சிவேளை சாப்பாட்டை
பொங்கச்சொல்லி நச்சரிப்பான் ...
கருக்கலிலே கொண்டுபோனா
உப்புக்கண்டத்தோட
உச்சிவேளை சாப்பாட்டை
பொங்கச்சொல்லி நச்சரிப்பான் ...
வரப்ப கடந்து நானும்
கழனியில கால வெச்சா
கருக்கருவா பட்டுடுமோ
பதபதைச்சு எந்திரிப்பான் ......
கழனியில கால வெச்சா
கருக்கருவா பட்டுடுமோ
பதபதைச்சு எந்திரிப்பான் ......
கட்டு சுமக்கையிலே
சும்மாடு கீழ விழும்
உச்சி வெயில் தொட்டு
நெத்திப்பொட்டு கோலமிடும்
சும்மாடு கீழ விழும்
உச்சி வெயில் தொட்டு
நெத்திப்பொட்டு கோலமிடும்
அத்திப் பூவைப்போல
அவன் சிரிப்பு என்ன நெய்யும்
அகத்திக்கீரையாட்டம்
அடிமனசு தாளமிடும் ...
அவன் சிரிப்பு என்ன நெய்யும்
அகத்திக்கீரையாட்டம்
அடிமனசு தாளமிடும் ...
கெண்டை விளையாடும்
குளத்து நீரெல்லாம்
கொட்டாங்குச்சிக்குள்ள
புகுந்துகிச்சு அவனால...
குளத்து நீரெல்லாம்
கொட்டாங்குச்சிக்குள்ள
புகுந்துகிச்சு அவனால...
படுத்தியெடுக்கறது
அவனோட வேலையாச்சு
பொழப்ப மறக்கறது
என்னோட டூட்டியாச்சு ...
அவனோட வேலையாச்சு
பொழப்ப மறக்கறது
என்னோட டூட்டியாச்சு ...
- நாகா

No comments:
Post a Comment