Monday, September 3, 2018

06-08-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 114 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
06-08-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 114
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வெடித்துவிடுமோ அச்சத்தில்
ஊதாமல் விடுகிறேன் பலூனை ...
தொடுவானம் தொட்டு
மூச்சிரைக்க திரும்பி வரும்
புல்லாங்குழலாகிறது நேசம் ...
நகம் கிள்ளி, உதடு கடித்து
வார்த்தைகள் துப்பி அடங்கிவிடுகிறது கோபம் ...
கட்டும் மணல்வீட்டை கலைத்து செல்லும்
கடற்கரை குதிரையின் குளம்பொலியில்
எதிரொலிக்கிறது அலைகளின் சத்தம் ...
மழைத்துளியின் கனத்தில்
அணைமீறுகிறது நதியின் அமைதி ..
புறாக்களின் சிறகசைப்பில்
உதிராமல் கிடக்கிறது ஆகாயம் ...
காற்றடித்து உப்பிய சைக்கிள் டயராக
சுற்றுகிறது என்னை சுமந்தபடி காதல்...
- நாகா

No comments:

neelam enbathu song