Monday, September 3, 2018

01-08-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 111 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
01-08-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 111
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தேன்கிண்ணம் வண்ணச்சுடர்
இன்று ஒரு தகவல்
ஒளியும் ஒளியும்
வாரச்சந்தை முருகன் டாக்கீஸ்
சிவாஜி எம்ஜியார் ரஜினி கமல்
எப்போவாச்சும் மோகன் ராமராஜன்
ராணிமுத்து கிரைம் நாவல் பாக்கெட் நாவல்
பரமசிவம் நாடார் பம்புசெட்
அந்தோணிகுருசு பாத்திரக்கடை
பனைஓலைமிதக்கும் மதகு ...
பனிரெண்டுமணி டவுன்பஸ்
வயசுபோன ஆலமரம்
ஸ்போக்ஸ் உடைந்த ஹெர்குலிஸ் சைக்கிள்
ரெட்டைஜடை பின்னல் மஞ்சள் கனகாம்பரம்
பச்சை தாவணி செங்கல் சூலை
ஊதாக்கலர் ரிப்பன்
ஊர்க்கோடி பேய்பங்களா
பெரியாத்தாக்கிழவி ஒற்றை பாம்படம்
சொக்கட்டான் ஆடுபுலியாட்டம் பல்லாங்குழி
கண்ணாமூச்சி ஐஸ் பாய்
உடைந்த ரயில்வே ஸ்டேஷன் மரபெஞ்சு
குதித்து ஆடும் வால் நசுங்கிய அணில்
எல்லாம் நினைவில் வந்துபோகிறது ஒன்றை தவிர
கீழத்தெரு முனியாண்டி பைய்யனும்
மேலத்தெரு சுப்பிரமணி பெண்ணும்
பட்டணம் ஓடிப்போகாதவரை
ஒற்றையடிப்பாதையில் பனங்காய் வண்டி
ஓட்டிக்கொண்டிருந்தது காதல்...
- நாகா

No comments:

neelam enbathu song