RJ Naga
30-07-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 109
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
நல்லவேளை பெயர் இன்னும் மறக்கவில்லை
ஆனால் எல்லாம் மறைத்திருக்கிறது காலம் ...
பாதிக்கடித்து கொடுத்த புளியங்காய்
நிப் உடைந்த பேனாவிற்கு பதிலாக
பால்பாயிண்ட் பேனாவை எடுத்துக்க சொல்லி தந்த
ஒரு காலாண்டு தேர்வு மத்திய நேரம்
பச்சைக்கலர் ரிப்பனும் பிளாஸ்டிக் வளையலுமாக
தொலையாத என்னிடமிருந்து
தொலைத்திருக்கிறேன் அவனை பலவந்தமாக ....
பள்ளிக்கூடம் படித்துறை கருவேலங்காடு
வாரச்சந்தை முண்டந்துறை எங்கும்
நிறைந்திருக்கலாம் பால்யத்தின்
பகல் விலகிய பொழுதுகள் பாதையெங்கும் ...
அம்மாவிற்கு அவனுடன் பேசுவதில்
அவ்வளவு பிரியம் இல்லை ....
அப்பாவிற்கு அந்தஸ்து மீது அக்கறை அதிகம்
நட்பைக்கூட தரம் பார்த்துதான் வாங்குவார்...
ஒரு வியாபாரியை போல் அவரின் கொள்முதலில்
விற்பனையாகாமல் போனது எங்கள் நட்பு..
வாழ்க்கை வசதிகளை வாரிக்கொடுத்ததில்
ஒரு அகதியைப்போல் மாறிப்போனது
நேற்று அவனை பார்த்தபோதுதான் தெரிந்தது
என்னை அவன் அடையாளப்படுத்தி கொண்டதும்
அவனை நான் அடையாளப்படுத்த முயன்றதும்
மகளுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் ...
தன் நண்பர்களை அறிமுகப்படுத்தும் தைரியம்
நேற்று என்னிடமும் இருந்திருக்கலாம்
நட்பின் விதை இன்னும்
உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்னிடம்
புன்னகையுடன் கடந்து போகும் மகளின்
விரல் பிடித்து நடக்கிறேன் ஏதும் நிகழாததைப்போல் ...
ஆனால் எல்லாம் மறைத்திருக்கிறது காலம் ...
பாதிக்கடித்து கொடுத்த புளியங்காய்
நிப் உடைந்த பேனாவிற்கு பதிலாக
பால்பாயிண்ட் பேனாவை எடுத்துக்க சொல்லி தந்த
ஒரு காலாண்டு தேர்வு மத்திய நேரம்
பச்சைக்கலர் ரிப்பனும் பிளாஸ்டிக் வளையலுமாக
தொலையாத என்னிடமிருந்து
தொலைத்திருக்கிறேன் அவனை பலவந்தமாக ....
பள்ளிக்கூடம் படித்துறை கருவேலங்காடு
வாரச்சந்தை முண்டந்துறை எங்கும்
நிறைந்திருக்கலாம் பால்யத்தின்
பகல் விலகிய பொழுதுகள் பாதையெங்கும் ...
அம்மாவிற்கு அவனுடன் பேசுவதில்
அவ்வளவு பிரியம் இல்லை ....
அப்பாவிற்கு அந்தஸ்து மீது அக்கறை அதிகம்
நட்பைக்கூட தரம் பார்த்துதான் வாங்குவார்...
ஒரு வியாபாரியை போல் அவரின் கொள்முதலில்
விற்பனையாகாமல் போனது எங்கள் நட்பு..
வாழ்க்கை வசதிகளை வாரிக்கொடுத்ததில்
ஒரு அகதியைப்போல் மாறிப்போனது
நேற்று அவனை பார்த்தபோதுதான் தெரிந்தது
என்னை அவன் அடையாளப்படுத்தி கொண்டதும்
அவனை நான் அடையாளப்படுத்த முயன்றதும்
மகளுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் ...
தன் நண்பர்களை அறிமுகப்படுத்தும் தைரியம்
நேற்று என்னிடமும் இருந்திருக்கலாம்
நட்பின் விதை இன்னும்
உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்னிடம்
புன்னகையுடன் கடந்து போகும் மகளின்
விரல் பிடித்து நடக்கிறேன் ஏதும் நிகழாததைப்போல் ...
- நாகா
No comments:
Post a Comment