Monday, September 3, 2018

27-08-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 128 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
27-08-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 128
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகல்
ஒரு கருப்புவெள்ளை புகைப்படத்தில்
தேதி நேரம் தேடிக்கொண்டிருந்தேன்
முகம் தெரிந்த நண்பருக்கு பக்கத்தில்
யாரோ பின்னால் கடந்துபோக
பதிவாகி இருந்த காட்சியில்
உறைந்து போயிருந்தது நினைவு...
காதுகளை வருடிப்போகும் பண்பலையில்
படத்தின் பெயர் தேட வைத்த தருணம்
உலர்ந்து போகிறது பேருந்தில்
கூடுதல் சில்லறை கொடுத்த நடுத்துனரை கடந்து
இறங்கும் இடத்திற்கு முன்னிறுத்ததில் இறங்கி வந்தது...
முகநூலில் பதிவிட்டிருந்த நண்பனுக்கு
விருப்ப குறியிட்டு நிமிர்கையில்
தான் தோற்றதற்காக கதறிக்கொண்டிருந்தாள்
அந்த தொலைக்காட்சியில் ஒரு பெண் ...
" மாலை சமையலுக்கு என்ன செய்யட்டும் "
மனைவியின் குரலில் பதிவு செய்திருக்கும்
தியேட்டர் ஞாபகம் சுழல ஆரம்பிக்கும் ...
இமை அமர்ந்து தூங்க நிர்பந்திக்கும்
இத்தியாதிகளுடன்தான்
கடந்துபோக வேண்டி இருக்கிறது..
ஞாயிறு தூங்க மட்டும் அல்ல
தூங்கும் நினைவுகளை
உசுப்பவும் செய்யலாம் என்னை போல....
- நாகா

No comments:

neelam enbathu song