Monday, September 3, 2018

28-08-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 129 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
28-08-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 129
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
முகம் பார்க்கும் கண்ணாடியில்
வழுக்கிப்போன முகங்களை
ஆகாய கிளையில் ஊஞ்சலாடிக்கொண்டே
பார்த்துக்கொண்டிருந்தது அந்த பறவை ...
முகமூடிகளுடனும் அரிதாரங்களுடனும்
கடந்து போனது பல முகங்கள்....
புன்னகை கோபம் வன்மம்
இவைகளுக்குள் புதைந்துபோயிருக்கும்
மறந்து போன தன்முகம் தேடி
நடந்துகொண்டிருந்தது சுயங்கள் ..
ஒரு நீண்ட வரலாறை பொத்திவைத்திருக்கும்
அந்த நிலைக்கண்ணாடியில்
அடிக்கடி அந்த பறவையும்
முகம் பார்த்துக்கொண்டது சுயாதீனமாக ..
ஆண் முகம் பெண்முகம்
என்றெல்லாம் சொல்லிக்கொண்டதில்லை
நிலைக்கண்ணாடியை பொறுத்தவரை
அதற்க்கு எல்லாமே முகங்கள்தான் ..
பறவை முகத்துடன் வந்த ஒருவனும்
பாம்பின் முகத்துடன் வந்த ஒருத்தியும்
புன்னகைத்துக்கொண்டனர் ....
கிளைமுளைத்த முகத்தின் விளிம்புகளில்
அமர தொடங்கியது அந்த பறவை ...
யாரோ எறிந்து போன கல்பட்டு
உடைந்து சில்லுகளான கண்ணாடியில்
முளைக்க ஆரம்பித்திருந்தது வேர்கள்
அந்த பறவை இனி அதில் கூடுகட்டலாம் ...
- நாகா

No comments:

neelam enbathu song