Monday, September 3, 2018

30-08-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 130 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
30-08-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 130
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு பிசாசுடன்
பேசிக்கொண்டிருந்த போதுதான்
அந்த தேவதை என்னை கடந்து போனது ...
தேவதையின் வாசனை
பிசாசையும் கவ்வ ஆரம்பித்தது ..
கை நழுவி விழுந்த மந்திரக்கோலை
எடுக்க மறந்த நிமிடத்தில்
பிசாசிடம் இருந்து புறப்பட தொடங்கினேன் ...
அந்த தேவதைக்கும் பிசாசுக்கும்
இடைப்பட்ட தூரத்தில்
தேநீர்ப்பருகிக் கொண்டிருந்தது கனவு...
வெள்ளை உடையில் வராத தேவதையும்
கருப்பு ஆடையை விரும்பாத பிசாசும்
பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்...
உதிர்ந்த தேவதையின் புன்னகை
பிசாசின் கால்களில் கோலம் போட்டது ...
பிசாசின் நிழலில் ஊர்ந்துகொண்டிருக்கும்
எறும்பாகிறது இந்த கவிதை
தூரத்தில் சென்று திரும்பி
புன்னகைக்கிற தேவதைக்கு
என்னை தெரிந்திருக்கும் ......
- நாகா

No comments:

neelam enbathu song