Monday, September 3, 2018

31-08-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :131 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
31-08-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :131
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒவ்வொருமுறையும்
வண்ணங்களோடு தான் வருவாள்
முத்தங்களின் நிறம் தேடும் என்னிடம்
அன்பின் நிறம் பூசும் அந்த ராட்சசியின் தூரிகை ....
எனக்கான வண்ணங்களை தந்துவிட்டு செல்லும்
அவளிடமிருந்து இசையின் நிறம் தேடுவேன் ...
பூக்களின் மொழியில் பேசி போகும் நிமிடம்
நிறங்கள் குறித்தான என் பார்வை
மழை வண்ணங்களை பூசிக்கொண்டு சிலிர்க்கும் ...
வானவில்லின் ஏதோ ஒரு வண்ணத்திற்குள்
ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடும் அவளுடன்
நிறமற்றவனாக கண்கள் மூடி திரிகிறேன் ...
கை நிறைய வண்ணப் பொடிகளை
வாரியிறைகிறாள் என்னைச்சுற்றி ...
வண்ணக்கடலில் மூழ்கி திளைக்கிற தருணம்
ஒரு மாலுமியாக தூரிகை துடுப்பில் திசை சேர்க்கிறாள்...
எனக்குள் இருந்து ஒவ்வொரு வண்ணமாக
பிரித்தெடுக்கும் அவளின் சாதனை
என்னை வரைந்து போகிறது மிக நேர்த்தியாக ...
வண்ணங்களை போர்த்திக்கொண்டு
பறக்கும் சந்தர்ப்பங்களில் வண்ணத்துப்பூச்சியாய்
அவள் விரல் அமர்ந்து போகிறேன் ...
எங்களின் உரையாடலை பதிவுசெய்கிறேன்
அதை கவிதை என்கிறீர்கள் நீங்கள்
நானோ ஓவியம் என்பதாய் சொல்லி சிரிக்கிறேன் ...
- நாகா

No comments:

neelam enbathu song