Monday, September 3, 2018

31-08-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :132 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
31-08-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :132
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அநேகமாக எதையும்
நினைவுபடுத்தும் உத்தேசம்
இல்லை என்றாலும்
ஞாபகப்படுத்தும் வேலையை
செய்துகொண்டுதான் இருக்கிறது இந்த கவிதை ...
நலமறியும் அதன் தேடல்
சர்வ இயல்பாய் நடந்தேறிவிடுகிறது ...
அவனுக்கும் அவளுக்குமான
வெற்றிடத்தை முத்தங்கள் இட்டு நிரப்புவதை போல ...
ஒரு தொடர் பயணத்தின்
முடிவிலியை தரிசித்துக்கொண்டிருக்கும்
வழிப்போக்கனாகிறது நேசம்...
புரிந்தும் புரியாமலும் புன்னகைக்கும்
அந்த அடர் நிமிடத்தில்
ஓசையில்லாமல் வந்தமர்கிறது
அவனை அவளுக்கும் அவளை அவனுக்கும்
சுட்டிக்காட்டி செல்லும் நிகழ்...
- நாகா

No comments:

neelam enbathu song