Monday, September 3, 2018

05-09-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :133 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
05-09-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :133
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஓட்டை ஹெர்குலிஸ் சைக்கிள்
தயிர் சாதம் மாவடு ஊறுகாய்
பஞ்சகச்சம் காதுகடுக்கன்
கணக்கு வாத்தியார் ரங்கசாமியை
இப்படித்தான் பார்த்திருக்கிறேன் நான் ..
கொண்டையில் வைத்த மல்லிப்பூ
சாம்பார் சாதம் உருளைக்கிழங்கு
மழையில்லா நேரத்திலும் கையில் குடை
தமிழம்மா அலமேலுவை
மறக்க முடியாது எப்போதும் ...
பி.டி.வாத்தியாரின் முகம் மறந்து போனது
அவரது பெயரும் அந்த முறுக்கு மீசையும்
பள்ளிக்கூட மதில் சுவர் தாண்டி
ஒலித்து அடங்கும் அந்த விசில் சத்தமும் …
கூட்டமாக தமிழ் வாழ்த்தில் தொலைந்த போது
ஒழுங்காய் பாட சொல்லிய
பரிமளா டீச்சரும் ரமணி சாரும்
வந்து போகின்றனர் இப்போது ..
வகுப்பறையும் கரும்பலகையும்
உதிரும் சாக்பீஸ்களை ஞாபகப்படுத்தி போகிறது ..
முதல் பெஞ்சும் கடைசி பெஞ்சுமான வாழ்க்கையில்
வருகையும் பதிவுகமாக வந்து செல்லும் நினைவுகளில்
வராமல் இருப்பதில்லை ஆசிரியர்கள்
கையில் பிரம்புடனும் கூடுதல் அன்புடனும்….
- நாகா

No comments:

neelam enbathu song