Monday, September 3, 2018

06-09-2017 புதன் ஒற்றையடிப்பாதை :134 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

06-09-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :134
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தவிட்டு குருவிக்கும்
நூலாம்படைக்குமான நேசத்துடன்
தொடங்குகிறது இந்த காதல் ...
உடைந்த ஜன்னலுக்கு பக்கத்தில்
காரை பெயர்ந்த சுவரின் வெடிப்பில் இருந்து
முளைக்க ஆரம்பிக்கும் சிறு செடியைப்போல
புன்னகைக்கிறது அவ்வப்போது...
குருவியின் ரெக்கை பட்டு சிதைந்துபோன
வலையை பின்ன ஆரம்பிக்கும்
சிலந்தியின் மாய வலைக்குள்
கூட்டுக்கட்ட தயாரானது ஈசல் ஒன்று ...
ஒரு மழைக்கால ராத்திரியில்
நனைந்த செடியின் ஈரத்தில்
பதுங்க ஆரம்பித்த எறும்பை போல
அதன் காதலை எழுதி செல்லும்
தனிமையை போர்த்திக்கொண்டிருந்தது இருள்...
யாருக்கும் தெரியாத ஒரு பின்னிரவில்
இறந்து போயிருந்தது அந்த குருவி ...
குருவியின் ரெக்கையில் முதன்முதலாக
ஊர்ந்துகொண்டிருந்தது சிலந்தி
எல்லாம் அறிந்தும் ஏதும் அறியாதது போல...
- நாகா

No comments:

neelam enbathu song