Monday, September 3, 2018

07-09-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :135 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
07-09-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :135
ஒரு பூனைக்கும் எனக்குமான நேசம்
அநேகமாக
கரப்பான் பூச்சிக்கும் சமயலறைக்குமான
நேசம் போல் ஆகாது ...
பலருக்கு கரப்பான் பூச்சி என்றால் ஒவ்வாமை ..
பூனையிடம் அப்படி தென்படுவதில்லை
இருந்தாலும் பூனை பிடிக்காதவர்களாகவே
தங்களை காட்டிக்கொள்ள முனைந்தனர்...
மதில் தாண்டும் பூனைகளுடனும்
சமையலறை வலம்வரும் கரப்பான் பூச்சிகளுடனும்
உறங்க வேண்டியிருக்கிறது வீடுகள் ...
இரவில் பாத்திரம் உருளும் சத்தத்தில்
விழித்துக் கொள்கின்றன கரப்பான் பூச்சிகள் ..
பூனைகளுடன் விளையாட
பழகிக்கொள்ளும் எலிகளை விரட்டும்
பூனைகளால் விரட்ட முடிவதில்லை
கரப்பான் பூச்சிகளை ...
ஒரு கரப்பான் கவிதையை பூனை மொழியில்
எழுதிய திருப்தியில் முடிகிறது இந்த கவிதை…
- நாகா

No comments:

neelam enbathu song