Monday, September 3, 2018

10-09-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :136 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
10-09-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :136
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு மரத்திற்கும் அதன் கிளை அமர்ந்த
பறவைக்குமான நேசம் இந்த கவிதை ..
பறவையின் கூட்டில் இருந்து
அடிக்கடி தவறி விழுந்த முட்டைகளின்
எண்ணிக்கையை போல எப்போதாவது
நிகழ்ந்துவிடுகிறது கவிதை எழுதுதல்...
உதிரும் பறவையின் இறகுகளும்
நிலம் தொடும் மரத்தின் இலைகளும்
பரஸ்பரம் உரையாடிக் கொள்கின்றன
எந்த ஒரு ஒத்திகையும் இல்லாமல் ...
எப்போதாவது பேசிக்கொள்ளலாம்
நம்பிக்கையில் காத்திருந்தது மரம் ..
பறவையின்மொழி பழக ஆரம்பித்த
ஒரு வனாந்திர நிமிடத்தில்
வெட்டுப்பட்ட மரத்தில் இருந்து
பறக்க ஆரம்பித்தது அந்த பறவை ...
சரிந்து விழுந்த மரத்தின் கிளையில்
தொங்கி கொண்டிருந்தது கூடு..
பறவை இல்லாத கூட்டுக்குள்ளிருந்து
வெற்றிடத்தை ரசிக்க ஆரம்பித்தது அந்த மரம்
ஒரு காலத்தில் பறவையின் சங்கீதத்தில்
கண்மூடிய தருணங்களை அசைப்போட்டபடி ....
- நாகா

No comments:

neelam enbathu song