Monday, September 3, 2018

12-09-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :137 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
12-09-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :137
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கரைத்தொட்டு திரும்பும்
அலையின் பின்னால் இருந்து
குரல் கொடுக்கிறது இந்த கவிதை ..
யாரோ நடந்து போன சுவடை
வலுக்கட்டாயமாக அழித்த தடத்தில்
அமர்ந்து போகிறது ஒரு வண்ணத்து பூச்சி
நிச்சயம் அது கேட்டிருக்க வாய்ப்பில்லை
சிரிக்கும் குரலையும் சிதைந்த கனவையும் ...
பறக்க எத்தனிக்கும் அதன் கால்களில்
அந்த கவிதையின் வார்த்தைகள்
ஒட்டிக் கொண்டது யாருக்கும் தெரியாமல் ...
மிதந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு குழந்தை
வீசி விட்டு போன சாக்லெட் உரையில்
கரையொதுங்கி கொண்டிருந்தது கவிதைகள் ....
இறைந்து கிடந்த மணல்வெளியெங்கும்
சிதறிய வார்த்தைகளை சிரமப்பட்டு
எடுக்க வேண்டி இருந்தது எனக்கு ...
மணல் வீடுகளில் குடிபுக ஆசைப்படும்
அதன் பிரியங்களின் மீது
ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது நண்டுகளாக காதல்...
நேசத்தின் கஜல் அந்த கடற்கரையில் கேட்டுக்கொண்டிருந்தது
அதிகாலை நேரத்தில் முதல் முறையாக
கண் விழிக்க ஆரம்பித்தது அந்த கவிதை…
- நாகா

No comments:

neelam enbathu song