Monday, September 3, 2018

13-09-2017 புதன் ஒற்றையடிப்பாதை :138 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
13-09-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :138
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கொஞ்சம் மூங்கில் நிறைய காற்று
அவள் வருகிற போதெல்லாம்
துளிர்க்க ஆரம்பிக்கிறது இசை ...
துளைகளின் வழியே வெளியேறி
ஊர் சுற்ற கிளம்புகிறது அவளுடன் ...
உதிர்ந்த மரத்தின் நிழல்
வாசித்து கொண்டிருந்தது வனத்தை .....
காடு கடந்து சமவெளி இறங்கி
நகரம் தொட்டிருந்தது அந்த கச்சேரி ...
ஒரு தேர்ந்த ஓவியனின் தூரிகையை
நனைத்து போகும் இசையின் சாரல்
வரைந்து சென்றது அவள் கூந்தலை...
கான்வாஸ் நிரப்பிய வண்ணங்களிலிருந்து
மிதக்க ஆரம்பித்தது அந்தர மீனொன்று
நதியில்லாத இடத்தில் துள்ளியபடி ...
ஏதோ ஒரு தூண்டிலில் சிக்கிக்கொள்ள
பிரியம் இழைக்கும் அதன் செயலில்
தொங்கிக்கொண்டிருந்தது இசையின் துண்டொன்று ..
உதடுகளை தொட்டு உயிர் பெற காத்திருக்கும்
மூங்கிலுக்குள் இருந்து ஒலிக்க ஆரம்பித்தது
துளையிட்டு சென்ற வண்டுகளின் கவிதை ...
- நாகா

No comments:

neelam enbathu song