Monday, September 3, 2018

14-09-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :139 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

RJ Naga
14-09-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :139
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு மீன் தொட்டியும்
தூண்டில்காரனும் முடித்த உரையாடலை
ஒரு தோட்டக்காரனும்
பூந்தொட்டியும் தொடங்க வேண்டி இருந்தது ...
முன்னதில் சிக்கிக்கொள்ளாத மீனும்
பின்னதில் விரல் பறிக்காத பூவும்
பிற்பாடு பேசிக்கொள்ள பிரியப்பட்டன....
உறங்கிய வீட்டுக்குள்ளிருந்து
நீந்திய மீன்களின் வலை கனவுகளில்
மாட்டிக்கொண்ட தூண்டில்காரனை
பரிதாபமாக பார்த்தன அந்த கண்ணாடி தொட்டி ..
எங்கிருந்தோ வந்தமர்ந்த ஒரு தட்டானின்
பின்னங்கால்களை பற்றிக்கொண்டு
பறக்க எத்தனித்த பூக்களை
தாகத்துடன் பார்த்த தோட்டக்காரனுக்கு
பூவின் மொழி தெரியாமல் போனதில்
குதூகலப்பட்டது அந்த மண்தொட்டி ...
இரவின் தனிமையை மீனும்
பகலின் மௌனத்தை பூவுமாக
இசைத்து கொண்டிருந்தது அந்த வீடு ...
ஒரு உச்சி வேளையில் செத்துப்போனது மீன்
ஒரு அந்தி பொழுதில் சருகாய் ஆனது பூ
காற்றில் விரவிய வாசனை பேச ஆரம்பித்தது
தோட்டக்காரனும் தூண்டில்காரனும்
எழுத ஆரம்பித்தனர் இந்த கவிதையை ....
- நாகா

No comments:

neelam enbathu song