Monday, September 3, 2018

18-09-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை :141 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
18-09-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை :141
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு தெரு பாடகனின் பிசிறு தட்டும் குரலை
கடன் வாங்கியிருந்தது இந்த கவிதை ...
எலெட்ரிக் டிரைனின் தாலாட்டை போல
இசைக்க ஆரம்பிக்கும் என் பயணத்தில்
தண்டவாளங்களில் ஆடு மேயும்
மஞ்சள் பூக்களாகி போனது பாடல்கள்...
இசையும் இசை நிமித்தமுமாக
இசைக்கும் நிமிடங்களில்
அன்னியப்பட்டே வந்திருக்கிறது அது ..
ஒற்றையடி பாதையும் நடுநிசியும்
புளியமரமும் ஆலமரமும் எப்போதாவது
உதடுவரை கொண்டுவந்த பாட்டை
வேலிகாத்தான் மரத்தில் கிழிந்த துணியாக
தொங்கவிட்டு போகும் ...
குளியறைகளும் தனிமை பொழுதுகளும்
ஈரக்காற்றில் சோப்புநுரைகளுக்குள்
தந்துவிட்டு போகும் பாடல்களை கொடிக்கம்பிகளில்
காயப்போட்டிருப்பேன் ஈரம்சொட்டியபடி ...
அதென்னவோ பாடல்களை கேட்கும் காதுகள்
உதடுகளை திறக்கவிடுவதில்லை...
ரசிக்க ஆரம்பிக்கும் தருணங்களில்
சத்தமிட்டு பாட ஆரம்பிக்கிறது என் தனிமை ...
பாடல்கள் இல்லாத இடத்தில்
இந்த கவிதைக்கு என்ன வேலை
நீங்கள் கேட்க ஆரம்பிக்கும் போது யாரோ ஒருவன்
இசைக்க ஆரம்பிக்கலாம் அதை பாடலாக ...
- நாகா

No comments:

neelam enbathu song