Monday, September 3, 2018

19-09-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :142 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
19-09-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :142
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
உடல் சுமந்து நடப்பது எவ்வளவு சிரமம்
ஒரு பட்டாம்பூச்சிக்கு தெரியாத உண்மை
தெரிந்திருக்கிறது இந்த கவிதைக்கு ...
பறக்க வைக்கும் ஆகாயத்தின் விரல்களுக்கு
முத்தமிட்டு திரும்பும் அதன் சத்தம்
சிறகில் இருந்து விடுபட்டதாக எண்ணிக்கொள்கிறது ...
சமரசம் செய்து கொள்ளாத கவிதைக்கும்
மிதப்பதாய் நினைத்து பொத்தென்று விழும்
தட்டானுக்கும் பெரிய வித்தியாசமில்லை ..
செத்தொழிந்த சிறகை இழுத்து செல்லும் எறும்பு
நேற்று சர்க்கரை துணுக்கில் மயங்கி கிடந்ததை
அந்த கவிதை பார்த்திருக்கிறது அசூயையில்லாமல் ...
இனிப்பை சுவைத்த அதன் உதடுகளில் மரணத்தின் ருசி
அதிர்ந்து விழிக்கும் கவிதைக்கு
சிறகு முளைக்க ஆரம்பிக்கலாம் ...
அது பட்டாம் பூச்சியாய் பறக்க எத்தனிக்கலாம்
கடைசியில் பொத்தென்று விழுந்து செத்தும் போகலாம் ...
இருந்தும் பறத்தலின் சுவை உணராமல்
சிறகு உதிர்த்துக்கொள்ள பிரியமில்லை அதற்கு ...
- நாகா

No comments:

neelam enbathu song