Monday, September 3, 2018

20-09-2017 புதன் ஒற்றையடிப்பாதை :143 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
20-09-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :143
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு தேநீர் கடையில்
மிச்சமிருக்கும் சில கடன் பாக்கிகளும்
சிதறியிருக்கும் சில காகித கோப்பைகளுமாக
இந்த கவிதையை எழுத ஆரம்பிக்கிறேன் ...
சூடான திரவத்திலிருந்து
ஆவியாகிக்கொண்டிருக்கும் சிநேகத்தின்
பழைய புகைப்படம் போல
தொங்கிக்கொண்டிருந்தது அதன் இருப்பு...
மழைக்கால தூறலில் நனைந்தும்
வெயில் நேர சாலையில் இறங்கியும்
எண்ணெய் துடைத்த காகிதமாய் மாற்றிப்போகும் ….
மேன்ஷன் தோழமைகளை
மாலைநேர வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்டினியும்
பங்கிட்டு கொள்வதை போல
உரிமை கொண்டாடவே செய்கிறது இப்போது ...
அந்த தெருவை கடந்து வரும் போது
குறைத்து அடங்கும் ஒரு தெருநாய் ....
அதென்னவோ ரொம்ப நாட்களாகவே
பேருந்து நிறுத்தம் வரும்வரை
ஒரு கலிங்கத்து போரை நிகழ்த்திவிட்டு போகும் ..
உடன் வரும் இரண்டு ஈக்கள்
முகம் சுற்றி கழுத்தில் அமர்ந்து
தலைமுடி களைத்து பறக்காமல் பறந்து இம்சிக்கும்…
ஒரு பட்டாம்பூச்சி பூவாகிற போது
இன்னொரு பட்டாம்பூச்சி தேன் குடிக்கிறது
மலரும் வண்னத்துப்பூச்சியுமான வாழ்க்கை இது
மலர வைக்கிறது இந்த கணத்தை சிலிர்ப்புடன்…
- நாகா

No comments:

neelam enbathu song