Monday, September 3, 2018

27-09-2017 புதன் ஒற்றையடிப்பாதை :148 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
27-09-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :148
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு தேநீர் கோப்பையும்
இரண்டு மேசைக்கரண்டி சர்க்கரையும்
மூன்று சேதாரமில்லாத முத்தங்களுமாக
இந்த கவிதை முற்றுப்பெற்றால்
நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம் ...
கொஞ்சம் தூறல் பிடிவாதம் பிடிக்காத இசை
பிடித்தவள் சமைக்கும் பாகற்காய்கறி
மேசை முழுதும் விரவி கிடக்கும்
ஜெயகாந்தனும் புதுமைப்பித்தனும் ...
ஒரு நிழலை மறைத்துக் கொண்டிருக்கும்
இன்னொரு நிழலாகும் ஊடல்...
மெழுகுவர்த்தி சுடர் எழுதும்
அசையும் சுவர் ஓவியம் ...
பின்னங்கழுத்தில் படரும்
பெண்வாசனையில் துளிர்க்கும் கைக்கிளை ...
மகரந்த கூந்தலில் உதிரும்
சூல் கொண்ட மேகம்....
எதோ ஒன்றை எழுத ஏதோ ஒன்று
எதையோ எழுதி செல்ல
காட்சிப்படுத்தப்படுகிறது மிகவும் கவனமாக...
- நாகா

No comments:

neelam enbathu song