Monday, September 3, 2018

25-09-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை :146 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
25-09-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை :146
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கருப்பு வெள்ளை புகைப்படத்தில்
அப்படியொரு ஈர்ப்பு அவனுக்கு ..
வண்ணப்படங்களில் ஒளிந்திருக்கும்
நிறங்களை பிரித்தெடுக்க
பழகி இருந்தது அவன் கண்கள்...
நேற்றைய வண்ணப்படங்களையும்
இன்றைய கருப்புவெள்ளை புகைப்படங்களையும்
ஒப்பிடும் நண்பர்களுக்கு மத்தியில்
தலைப்பு செய்தியாக்கப்படுகிறான் அவன் ..
இதற்காகவே நேரடி கருப்புவெள்ளை படங்களை
தருவிக்கும் அவனிடமிருந்து
வண்ணங்களை எதிர்பார்ப்பதில்லை யாரும் ..
நிறங்களில் கரைந்திருக்கும்
கருப்பும் வெள்ளையுமான காட்சிகளில்
பிரதிபலிக்கவே செய்கின்றன
வண்ணங்களில் தோய்ந்த வானவில்....
- நாகா

No comments:

neelam enbathu song